மத்திய அரசு போதுமான நிதியை வழங்காததால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது என காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அருள் அன்பரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட் பாளர்களிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபு தலைமை வகித்தார். திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் பரத் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், சோளிங்கர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவு மான அருள் அன்பரசு கலந்து கொண்டு விருப்பு மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர், செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப் பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர்புற தேர்தலில் போட்டியிட உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப் படுகின்றன.
மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான நிதியை முறையாக வழங்கவில்லை. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட் டத்தில் 6 ஒன்றிய கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலர் என 7 இடங்கள் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
இதில், 3 இடங்களில் காங்கிரசுக்கு எதிராக திமுக வேட்பாளர்களே நேரடியாக போட்டியிட்டு மனுதாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றனர். மேலும், 2 இடங்களில் சுயேச்சை வேட்பாளருக்கு திமுகவினர் நேரடியாக ஆதரவளித்து அவர்களை வெற்றிப்பெற செய்துள்ளனர்.
இதனால், காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ஆகவே, வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இதுபோன்ற கசப்பான சம்பவங்களை திமுகவினர் மறந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் செய்தது போல நகர்புற தேர்தலில் செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம். இந்த கூட்டணி தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதேபோல திமுகவினரும் செயல்பட வேண்டும்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான இட ஒதுக்கீடு சிறப்பாக நடைபெறும் என நம்புகின்றோம். அப்படி இல்லாமல், ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்தது போலத்தான், தற்போதும் நடக்கும் என்று சொன்னால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏமாந்தது போல, நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏமாறாது. எதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்’’ என்றார். இதில், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago