முன்னாள் முதல்வரின் உதவியாளரிடம் - பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சேலம் ஓமலூர் தின்னப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). இவர் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டாக இருந்து வந்தார். இந்நிலையில், மணி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (29) என்பவர் கடந்த மாதம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி கடந்த 28-ம் தேதி மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மணி மீது மேலும் சிலர் புகார் அளித்துள்ள நிலையில், மணியிடம் பணம் கொடுத்த யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கலாம் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்