கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் - விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம் :

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வட்டியில்லா பயிர்க் கடன் பெற்றுக் கொள்ளலாம் என கடலூர் மண்டல இணைப்பதிவாளர் வே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் விவசாயபணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கடலூர் மண்டல கட்டுப்பாட்டில் உள்ள 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லா பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். புதிதாகசேர்க்கப்பட்ட உறுப்பினர்க ளுக்கும் பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. உறுப்பினராக இல்லாதவர்கள் உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து பயிர்க் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதில் தாமதம் ஏற்பட்டால் துணைப்பதிவாளர், கடலூர் சரகம்-7338720403, களஅலுவலர், கடலூர் வட்டாரம் -7338720407, களஅலுவலர், குறிஞ்சிப்பாடி வட்டாரம் - 7338720408, களஅலுவலர், பண்ருட்டி வட்டாரம் -7338720409, கள அலுவலர், அண்ணாகிராமம் வட்டாரம் - 7338720410, துணைப்பதிவாளர், விருத்தாசலம் சரகம் - 7338720404 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதேபோல் களஅலுவலர், விருத்தாசலம் வட்டாரம் -7338720416, களஅலுவலர், கம்மாபுரம்வட்டாரம் -7338720417, களஅலு வலர், நல்லூர் வட்டாரம் -7338720418,களஅலுவலர், மங்களூர் வட்டாரம் - 7338720419, துணைப்பதிவாளர், சிதம்பரம் சரகம் - 7338720405, களஅலுவலர், கீழ்புவனகிரி வட்டாரம் -7338720411, களஅலுவலர், பரங்கிப்பேட்டை வட்டாரம் - 7338720412, களஅலுவலர், காட்டுமன்னார்கோவில் வட்டாரம் - 7338720413, களஅலுவலர், கீரப்பாளையம் வட்டாரம் -7338720414,கள அலுவலர் குமராட்சி வட்டாரம் - 7338720415 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லா பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE