மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு - அரசு உரிய நிவாரணம் வழங்கும் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதி

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, லால்குடி ஆகிய ஒன்றியங்களில் தொடர் மழையால் நீர் நிறைந்த ஏரிகள், ஆறுகள், மழைநீர் சூழ்ந்த பகுதிகள், சேதமடைந்த பயிர்கள், சாலைகள் மற்றும் நந்தியாறு செல்லும் பகுதிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புள்ளம்பாடி ஒன்றியத்துக் குட்பட்ட ஊட்டத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “திருச்சி மாவட்டத்தில் மழையால் நேரிட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, விவசாயிகளுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங் கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து, ஊட்டத்தூர் வழி யாகச் செல்லும் நந்தியாற்றைப் பார்வையிட்டு, ஆற்றின் குறுக்கே மதகுகளுடன் கூடிய உயர்நிலைப் பாலம் அமைக்க அலுவலர்களுக்கு அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

மேலும், கொள்ளிடத்தில் நந்தியாறு சென்று சேரும் இடம் வரை ஆய்வு செய்து, உரிய அளவுக்கு அகலப்படுத்தி, தூர் வாரி தேவையான இடங்களில் மதகுகளுடன் கூடிய பாலம், தடுப்பணை அமைக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும், நந்தியாற்றுக்கு வரும் ஏரிகளின் மிகை நீர் சரியான வழியில் செல்லும் வகையில் வடிகால் அமைக்கவும் அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, பெருவளப் பூரில் மயானத்துக்குச் செல்லும் பாதையில் சாலை அமைக் கவும், ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய பாலம் அமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், காணக்கிளியநல்லூர், வந்தலை, புஞ்சை சங்கேந்தி, இருதயபுரம் மற்றும் லால்குடி ஒன்றியம் செம்பரை ஆகிய பகுதி களில் மழையால் சேதமடைந்த பயிர்கள், சாலைகள் மற்றும் நந்தி யாற்றில் நீர்போக்கு ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, வந்தலையில் ஆற்றின் குறுக்கே மதகுகளுடன் கூடிய பாலம் அமைக்கவும், புஞ்சை சங்கேந்தியில் நந்தியாற்றின் குறுக்கே உள்ள பாலத்தை அகல மாகவும், உயரமாகவும் அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, 16 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிரம்பி யுள்ள கொணலை ஏரியைப் பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மிகைநீர் செல்லும் பகுதியில் தடுப் பணை கட்டவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, நீர்வள ஆதாரத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, எம்எல்ஏக்கள் அ‌‌.சவுந்தரபாண்டியன், சீ.கதிரவன், செ.ஸ்டாலின்குமார், நீர்வள ஆதாரத் துறை கண்காணிப் புப் பொறியாளர் திருவேட்டைச் செல்லன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் விஜயலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பிச்சை, லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், வேளாண் இணை இயக்குநர் முருகேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கங்காதாரிணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்