குற்றாலத்தில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆய்க்குடியில் 76 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணையில் 67 மி.மீ., தென்காசியில் 56.40 மி.மீ., கடனாநதி அணை, அடவிநயினார் அணையில் தலா 45 மி.மீ., செங்கோட்டையில் 44 மி.மீ., சிவகிரியில் 40 மி.மீ., கருப்பாநதி அணையில் 35 மி.மீ., சங்கரன்கோவிலில் 26 மி.மீ., ராமநதி அணையில் 15 மி.மீ. மழை பதிவானது.

அடவிநயினார் அணை தவிர மற்ற 4 அணைகளும் நிரம்பி யுள்ளதால் அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப் படுகிறது.

கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 1,253 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 68 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 174 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 111 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 129.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி நீர் வந்தது. 30 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்