காவிரியில் ரசாயனக் கழிவுகளை வெளியேற்றியதாக - மேட்டூரில் 3 சர்வீஸ் ஸ்டேஷன்களை மூட உத்தரவு :

காவிரி ஆற்றில் ரசாயனக் கழிவுகளை வெளியேற்றியது தொடர்பாக மேட்டூரில் லாரி டேங்கர்களை சுத்தம் செய்யும் 3 சர்வீஸ் ஸ்டேஷன்களை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மேட்டூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ரசாயனங்களை கொண்டு வரும் லாரிகளின் டேங்கர்களை சுத்தம் செய்யும் சர்வீஸ் ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 3 சர்வீஸ் ஸ்டேஷன்களில் லாரி டேங்கர்களில் எஞ்சியிருந்த அமிலங்களை சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் வெளியேற்றியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த 3 சர்வீஸ் ஸ்டேஷன்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவற்றின் மின் இணைப்புகள் கடந்த 27-ம் தேதி துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறும்போது, “இந்த 3 சர்வீஸ் ஸ்டேஷன்களும் ஏற்கெனவே ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தியவை. இந்நிலையிலும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றம் செய்துள்ளனர். தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றினால், தொழிற் சாலைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அவற்றின் மீது சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்