மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து காட்டுமன்னார் கோவில் பகுதி காவிரி டெல்டா சங்கத்தின் தலைவர் அத்திப்பட்டு மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் சம்பா நெல் நடவு நட்ட விளைநிலம், பருத்தி, மக்காளச்சோளம், உளுந்து உள்ளிட்ட அனைத்து வகை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட நெல் வயலுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம், உளுந்து மற்றும் பருத்தி, மக்காளசோளம் வயல்களுக்கு ஏக்கருக்கு ரூ. 75 ஆயிரமும், வாழை, மிளாகாய் உள்ளிட்ட தோட்டப்பயிர்களுக்கு ஏக் கருக்கு ரூ 75 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago