ராமநாதபுரம் அருகே தண்ணீரில் சிக்கிய - 150 ஆடுகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே வைகை யாற்று தண்ணீரில் சிக்கிய 150 ஆடுகளை ராமநாதபுரம் தீய ணைப்புத் துறையினர் படகு மூலம் மீட்டனர்.

வைகை அணையிலிருந்து சுமார் 7 ஆயிரம் கன அடி தண்ணீர் ராமநாதபுரம் மாவட் டத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணையிலிருந்து ராமநாதபுரம் பெரிய கண்மாய், வலது, இடது பிரதானக் கால்வாய்கள், கீழ நாட்டார் கால்வாய்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள கண்மாய் களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வைகை ஆற்றில் அதிக தண்ணீர் வருவதால் ராமநாதபுரம் வைகையாற்றில் இருந்து கடலுக்குச் செல்லும் கால்வாயில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண் ணீர் புல்லங்குடி கிராம கால்வாய் வழியாகச் செல்கிறது. திடீரென இக்கால்வாயில் தண்ணீர் வந்த தால் புல்லங்குடியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது செம்மறி ஆடுகள் 125, அவற்றின் குட்டிகள் 25 ஆகியவை கால்வாயின் அக் கரையில் சிக்கிக் கொண்டன.

அதனையடுத்து முனீஸ்வரன் ஆடுகளைக் காப்பாற்ற தனது கிராம மக்கள் மூலம் தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ராமநாதபுரம் தீய ணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சுமார் 15 தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் சென்று, ஆடுகளை பத்திரமாக மீட்டுக் கரைக்கு கொண்டு வந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்