250 கிலோ புகையிலை பொருள் பறிமுதல் : கீழவளவு அருகே 3 பேர் கைது

மதுரை மாவட்டம், கீழவளவு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 250 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் வீ.பாஸ்கரன் உத்தரவிட் டுள்ளார்.

அதன்படி, கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டப்பட்டி பகுதியில் புகை யிலைப் பொருட்களை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்படி சம்பவ இடத்துக்கு தனிப்படை போலீஸார் சென்று சோதனை யிட்டனர்.

அதில் 250 கிலோ புகை யிலைப் பொருட்கள், புகை யிலை கடத்த பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அங் கிருந்து கைப்பற்றினர்.

இதுதொடர்பாக தனிப்படை யினர் நடத்திய விசாரணையில், சட்ட விரோதமாக புகை யிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்கள் சிங்கம்புணரியைச் சேர்ந்த சகாபுதீன் மகன் முஹம்மது ஹாரிஸ், அட்டப்பட்டியைச் சேர்ந்த ஹனிபா மகன் காதர் இப்ராஹிம், சிங்கம்புணரியை சேர்ந்த நாகராஜ் மகன் செந்தில் ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களைக் கைது செய்த தனிப்படையினர் 3 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்டம் முழுவதும் நடத்தப் பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்போர் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

மேலும் மதுரை மாவட்டத்தில் புகையிலைப்பொருட்களை பதுக்குவோர், விற்போர் மற்றும் கடத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE