திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பூமிநாதன், கடந்த 21-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டியில் ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் மேற்பார்வையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 3 காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைத்து திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் போலீஸாருக்கு புகார் வரப்பெற்ற ஆடு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி, திருச்சியில் 3, புதுக்கோட்டையில் 8, கரூரில் 1 என மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 ஆடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை பாராட்டிய டி.ஐ.ஜி சரவணசுந்தர், ஆடு திருட்டில் ஈடுபடுவோரைக் கண்காணித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago