நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் - உறுப்பினர்கள் சேர்க்கை :

By செய்திப்பிரிவு

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பும், நல உதவிகளும் வழங்குவதற்கு தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தை அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த வாரியத்தில் ஏதேனும் நாட்டுப்புறக் கலையில் ஈடுபட்டுள்ள 18 வயது முடிவடைந்த, 60 வயது நிறைவடையாத கலைஞர்கள் ரூ.100 பதிவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி31-ம் தேதிக்குள் ரூ.10 கட்டணம் செலுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் 2,638 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும், வாரியத்தில் பதிவு பெற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் வழங்க அரசுஆணையிட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் தமிழகஅரசால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது குழந்தைகள் பயின்று வரும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து படிப்புச் சான்றிதழ்கள் மட்டுமே பெற்று கல்விஊக்கத்தொகை பெற உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம். தென்காசி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வரும் சுமார் 4,000 கலைஞர்களுக்கு மேல்இருந்தும், நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யாத கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவுசெய்யவும், பதிவு பெற்ற கலைஞர்கள் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெறவும் ‘உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசுஅலுவலர் ஆ குடியிருப்பு, திருநெல்வேலி - 07’ என்ற முகவரியிலும், 0462 290 1890 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இத்தகவலை தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித் துள்ளார்.

வாரியத்தில் ஏதேனும் நாட்டுப்புறக் கலையில் ஈடுபட்டுள்ள 18 வயது முடிவடைந்த, 60 வயது நிறைவடையாத கலைஞர்கள் ரூ.100 பதிவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்