நம்பியாறு அணையிலிருந்து - பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு : 1,744 ஏக்கர் நிலங்கள்் பாசன வசதி பெறும்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்காக நம்பியாறு அணையிலிருந்து தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டத்திலுள்ள நம்பியாறு அணை நீர்த்தேக்கத்தி லிருந்து பிசான பருவ சாகுபடிக்கு சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தண்ணீரை திறந்துவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

நம்பியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக விநாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோட்டை கருங்குளம், கஸ்தூரிரெங்கப்புரம், குமாரப்புரம், திசையன்விளை, உறுமன்குளம், முதுமொத்தான்மொழி, கரைசுத்துபுதூர் ஆகிய கிராமங்களில் உள்ள40 குளங்கள் வாயிலாக 1,744.55 ஏக்கர் நிலங்கள் பசான வசதிபெறும். தமிழக முன்னாள் முதல்வர்கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட வெள்ள நீர் கால்வாய் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்போது பணிகள் வேகமாக நடைபெறுகிறது. பொன்னாக்குடி அருகேபாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ரயில்வே பாலம் கட்டுவதற்காக ஆரம்ப பணிகள் ஒப்புதலுக்கான அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாலப்பணிகளும் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை கொண்டு சென்றால் நாங்குநேரி, ராதாபுரம் பகுதிகளில் உள்ள 50,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தார்.

மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், சிற்றாறுவடிநிலகோட்ட செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜ், திசையன்விளை வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்