பேருந்து நிலைய கடைகளுக்கான வாடகையை குறைக்க கோரி கடையடைப்பு :

By செய்திப்பிரிவு

பாளையங்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையகடைகளுக்கான வாடகை கட்டணத்தைகுறைக்க வலியுறுத்தி, திருநெல்வேலியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள கடைகளுக்கான வாடகை மற்றும் டெபாசிட் கட்டணம்பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வியாபாரிகள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை போன்ற சிறிய நகரத்தில் இவ்வளவு பெரியதொகை கொடுத்து கடை நடத்த முடியாது என்பதால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்துவியாபாரிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை ராமசாமி கோயில்முன் குடும்பத்தினருடன் வியாபாரிகள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், டவுன் போஸ் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், பாளை பஸ் நிலைய வியாபாரிகள் சங்கம், நெல்லை மாநகராட்சி உள்ளாட்சி கடை வியாபாரிகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். பாளை காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சாலமோன் தலைமை வகித்தார். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்