வேலூரில் தொடர் மழை காரணமாக - சிதிலமடைந்த கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவு :

வேலூரில் பெய்து வரும் தொடர் மழையால் பழமையான கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிதிலமடைந்த கட்டி டங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் காந்தி ரோடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

பேரி சுப்பிரமணிசுவாமி கோயில் தெரு, பாபுராவ் தெரு சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமாக 2 மாடி கட்டிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடம் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பழமையான கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் எனக்கூறப்படுகிறது.

ஆகவே, இந்த கட்டிடத்தை உடனடியாக இடிக்க வேண்டுமென தனியார் மருத்துவமனை நிர்வாகத் துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று நோட்டீஸ் அளித்தனர்.

மருத்துவமனை நிர்வாகம் பாழடைந்த கட்டிடத்தை இடிக்க முன்வராவிட்டால் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிடம் இடித்து தரைமட்டமாக் கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் காந்தி ரோடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்