சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்ட நினைவுச் சின்னம் அமைக்க நடவடிக்கை : திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் தகவல்

By செய்திப்பிரிவு

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பேரவை நான்காம் ஆண்டு விழா நடைபெற்றது. பேரவைத் தலைவர் வினோத்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், விஜய்கண்ணன் விழாவை தொடங்கி வைத்தனர்.

விழாவில் காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனரும், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலருமான கார்த்திகேய சிவசேனாபதி பேசியதாவது:

ஜல்லிக்கட்டு குறித்து முன்பு விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்தது. கடந்த 11-ம் நூற்றாண்டில் ஏர் தழுவுதல் என்ற பெயரில் நடந்த நிகழ்வு, நாளடைவில் ஜல்லிக்கட்டு என மாறியது. சுற்றுலா இடங்களில் பயணிகள் காணும் வகையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தி இக்கலையை, பண்பாட்டினை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும். சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க முயற்சி செய்யப்படும், என்றார். பேரவை நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்