உலகனேரி சிறு கண்மாயில் : கழிவுநீரை விடுவதற்கு எதிர்ப்பு :

ஒத்தக்கடை ஊராட்சியில் சேகரமாகும் கழிவுநீரை உலகனேரி சிறு கண்மாயில் விடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை உலகனேரி, முத்து விநாயகாநகர், அயோத்திநகர் குடியிருப்போர் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதார பிரிவு செயற்பொறியாளர் ஆகியோ ருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அம்மனுவில் குறிப்பிட்டுள் ளதாவது: எங்கள் பகுதி முதலில் உலகனேரி ஊராட்சிக்குட்பட்டும், தற்போது மதுரை மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட பகுதியாகவும் உள்ளது.

எங்கள் குடியிருப்பு பகுதியின் மேற்கில் குளம், கிழக்கில் உயர் நீதிமன்ற கிளை வளாகம், தெற்கில் உலகனேரி சிறு கண் மாயும் உள்ளது.

உயர்நீதிமன்ற கிளை வளாகத் துக்கு கிழக்குப் பகுதியில் மேலூர் பிரதான சாலையில் நீதிபதிகள் குடியிருப்பு நுழைவாயில் அருகே ஒத்தக்கடை ஊராட்சிப் பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு லாரிகளில் வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.

இந்நிலையில் இந்த கழிவுநீரை குழாய் வழியாக எங்கள் குடியிருப்பு பகுதிக்கு கொண்டு வந்து உலகனேரி கண்மாயில் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு பணிகள் தொடங்கியுள்ளன.

ஒத்தக்கடை ஊராட்சி பகுதியில் சேகரமாகும் கழிவுநீரை சட்டப்பூர்வ அனுமதியில்லாமல் மாநகராட்சி பகுதியிலுள்ள குடி யிருப்புக்குள் விடுவது சரியல்ல.

இந்த கண்மாயில் கழிவுரை விட்டால் துர்நாற்றம் வீசுவதுடன், இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே ஒத்தக் கடை ஊராட்சி பகுதியிலேயே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து உயர்நீதிமன்ற வளாக கண்மாயில் தண்ணீரை விடவும் அல்லது பாதாளச் சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி கழிவு நீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE