மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் என்ற பெயரில் பலர் அரசின் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் டோல்கேட் மற்றும் பார்க்கிங் இடங்களில் கட்டணம் செலுத்த மறுப்பது, அரசு அதிகாரிகளை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது என சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு என்ற பெயரில் போலி அமைப்புகளை நடத்துவோர் மற்றும் கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைக ஈடுபடுவோருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வு விசாரித்து, இது தொடர்பாக ஏற்கெனவே நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் டிஜிபியும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார் என்று கூறி விசாரணையை நவ. 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago