மானாமதுரை அருகே - உப்பாற்றில் வெள்ளப்பெருக்கால் கரை உடைப்பு :

By செய்திப்பிரிவு

மானாமதுரை அருகே உப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

உப்பாறு, மதுரை மாவட்டம் திருவாதவூர் கண்மாயில் தொடங்கி சிவகங்கை மாவட்டம் தமறாக்கி, குமாரபட்டி, நல்லா குளம், பெரியகோட்டை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக செய்களத்தூர் அருகே வைகை ஆற்றில் கலக்கிறது.

தொடர்மழையால் தற்போது உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய கோட்டை - இடைக்காட்டூர் நெடுஞ் சாலையில் உள்ள கள்ளர்குளம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் உப்பாற்றின் ஒரு பகுதி யில் உள்ள கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செய்களத்தூர் கண்மாயின் வரத்து கால்வாயில் பாய்ந்து வருகிறது. ஏற்கெனவே கண்மாய் நிரம்பி உபரிநீர் வெளி யேறி வரும் நிலையில், ஆற் றின் கரை உடைப்பால் கண்மாய்க்கு அபரிமிதமான தண்ணீர் வருகிறது.

இதையடுத்து கண்மாய் கரை உடைந்து விடாமல் தடுப்பதற்காக வட்டாட்சியர் தமிழரசன் தலைமை யிலான அதிகாரிகள் செய் களத்தூர் கண்மாயில் உபரிநீர் வெளியேறும் கலுங்கு பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகலப்படுத்தினர். இதனால் உபரிநீர் வெளியேறும் அளவு அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE