நாமக்கல் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில், சிஐடியு தலைவர்கள் அனந்த நம்பியார், உமாநாத் ஆகியோர் நூற்றாண்டு மற்றும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமை வகித்தார். உதவித் தலைவர் எல்.ஜெயக்கொடி வர வேற்றார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி தொடங்கி வைத்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.சண்முகம் பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு மற்றும்அத்தியாவசியப் பொருட்கள்விலை உயர்வைக் கண்டித்து டிச.10-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் 10 நிமிடங்கள் சாலைகளில் ஓட்டிச் செல்லும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கு தொழிற்சங்கத்தில் பணிபுரியும்அனைத்து தரப்பு தொழிலாளர் களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி, சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.ரங்கசாமி, மாவட்ட உதவித் தலைவர் எஸ்.தனபால், மாவட்ட உதவி செயலாளர் கு.சிவராஜ், கோ.ஜெயராமன், சு.சுரேஷ், வி. கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago