கிருஷ்ணகிரி மாவட்ட விதைப் பண்ணைகளில் விவசாயிகள் விதை அறுவடையின்போது தரமான விதைகளை அறுவடை செய்ய வேண்டும் என விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை உதவி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 702 விதைப்பண்ணை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், நிலக்கடலை, காராமணி, ராகி, உளுந்து போன்ற பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. விவசாயிகள் விதைப் பண்ணைகளில் அறுவடை செய்து, விளைவித்த விதை குவியல்களை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அருணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகள் தரமான விதைக்கு உகந்த கதிர்கள் மற்றும் காய்களை அறுவடை செய்ய வேண்டும். உலர்த்தும்போது மிகுதியான ஈரப்பதமில்லாமல் விதை முளைப்புத்திறன் பாதிக்காத வகையில் உரிய ஈரப்பதத்தில் உலர்த்த வேண்டும். கொள்கலன் களில் இருப்பு வைக்கும்போது, ஈரப்பதமில்லாத நல்ல காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். நல்ல விதையே அடுத்தப் பருவத்துக்கான ஆகச் சிறந்த இடுபொருளாகும்.
எனவே, விவசாயிகள் விதைப் பண்ணையில் விதைகள் அறுவடை செய்யும் போது, கவனமாகவும், விதைச்சான்று தரத்தையும் கடைபிடிக்க வேண்டும், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago