வருங்காலங்களில் மழை பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் - அரியாற்றில் ரூ.100 கோடியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By செய்திப்பிரிவு

அரியாற்றின் கரையோரங்களில் ஏற்படும் மழை பாதிப்புகளைத் தடுத்து, நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில் ரூ.100 கோடியில் ஆற்றின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் கட்டப்படும் என மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி மாநகரில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பு களையும், ஆறுகளில் பெருக்கெடுத் துள்ள வெள்ளம், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளையும் அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டார். அதன்படி, எடமலைப்பட்டிப்புதூர் காந்தி நகர், கோரையாற்றின் கரை, கே.கே.நகர் சாலை சிம்கோ மீட்டர் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள், திண்டுக்கல் சாலை தேசியக் கல்லூரி, கருமண்டபம் புதுத் தெரு, பிராட்டியூர் முருகன் நகர், கருமண்டபம் அசோக் நகர், வயலூர் சாலை சண்முகா நகர், குழுமணி சாலை லிங்கம் நகர், ராஜலட்சுமி நகர், அரவானூர், உறையூர் வெக்காளியம்மன் நகர், பாத்திமா நகர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த குடியிருப் புகளை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, உணவு, தண்ணீர் பாட்டில், பால், பாய் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். அப்போது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், விரைவில் வெள்ளத்தை வடியவைக்க தேவை யான நடவடிக்கைகளை எடுக்கவும் உயர் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

ஆய்வுக்குப் பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யா ததாலேயே இந்தளவுக்கு மழை, வெள்ள பாதிப்பு நேரிட்டுள்ளது. வருங்காலங்களில் வெள்ள பாதிப்பு நேரிடாமல், நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுப் பணித் துறை அரியாறு கோட்டம் சார்பில் ரூ.100 கோடியில் அரியாற்றில் பக்கவாட்டில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டப்பட வுள்ளது. கோரையற்றில் முள்செடிகள், புதர்கள் இல்லாத வகையில் முழுமையாக சுத்தம் செய்யப்படும். இதன்மூலம் வருங்காலங்களில் தண்ணீர் எளிதாக வடிந்துவிடும். நீர்வழி ஆக்கிரமிப்புகள், மாநகரில் சேதமடைந்த மிக மோசமான கட்டிடங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்படும்.

திருச்சி மாவட்டத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் தாங்கும். ஆனால், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழைநீரும் திருச்சிக்கு வருகிறது. எனவேதான், வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நகராட் சிகள், மாநகராட்சிகளில் சேதம டைந்த சாலைகளைச் சீரமைக் கவும், புதிய சாலை அமைக்கவும் ரூ.600 கோடி நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள் ளார். மழை நின்ற பிறகு பணிகள் தொடங்கும். திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் மழை, வெள்ள பாதிப்பு நேரிடாத வகை யில் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து, புங்கனூர் ஊராட்சி வழியாகச் செல்லும் அரியாற்றில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தைப் பார்வையிட்டு, மிகை நீர் கரையைத் தாண்டி வயல்களுக்குச் செல்வதைத் தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தர விட்டார்.

ஆய்வின்போது, ஆட்சியர் சு.சிவ ராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டா லின்குமார், சீ.கதிரவன், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபூர் ரகுமான், நீர்வள ஆதாரத் துறை கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டைச்செல்வன், செயற் பொறியாளர்கள் மணிமோகன், சரவணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்