ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த கோட்டூர் கொல்லை கிராமத்தில் சோழர் கால பகவதி சிலை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரி வித்துள்ளது.
இதுகுறித்து அதன் செயலாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஜவ்வாது மலை அடுத்த கோட்டூர் கொல்லை கிராமத்தில் உள்ள சிறிய கோயிலில் கொற்றவை சிலையும், அதன் அருகே சோழர் கால கல்வெட்டு இருந்தது. 13 வரிகளை கொண்ட கல்வெட்டு 3 அடி உயரம் கொண்டது.
இக்கல்வெட்டு 11-ம் நூற் றாண்டில் முதலாம் குலோத் துங்க சோழனின் எட்டாம் ஆட்சி யாண்டில் (பொது.ஆ–1078) செதுக்கப்பட்டிருக்கலாம் என கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். கல்வெட்டில் நெல்வாடை மாதன் சித்திரமேழி, போடன் நக்கன், மாறன் மாதன், பன்றன் ஆகிய நால்வரும், பகவதி சிலையை செய்து வழங்கி யுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பகவதி என கல்வெட்டில் குறிப் பிடப்பட்டிருந்தாலும், எருமை தலை மீது நிற்கும் துர்க்கையும் (கொற்றவை), கைகளில் சங்கு சக்கரம் கொண்டு அமைந்துள்ளது. கொற்றவையை பகவதி எனும் பெயரில் வழிபடப்படுகிறது என்பது, இது ஒரு சான்றாகும். நெல்வாடை மாதன் சித்திரமேழி என்பது நெல்லில் இருந்து வரும் வாசம் என்ற பொருளில் அமைந்த புதுமையான பெயராகும்.
சித்திரமேழி என்பது வேளாண் பெருமக்கள் குழு என அறியப்படுகிறது. நக்கன் என்பது சோழர் காலத்தில் கல்வெட்டுகளில் அதிகம் புழங்கி வரும் சொல்லாகும். மாறன் என்பது பாண்டியர்களின் பட்ட பெயராக வரும் சொல்லாகும். பன்றன் என்ற பெயரின் தொடர்ச்சி கல்வெட்டில் கிடைக்கவில்லை. நான்கு வகையான தனிச்சிறப்பு பெற்ற பெயர்களுடையவர்கள், பகவதி சிலையை செய்து எழுந்தருளிவித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago