சேலத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை :

சேலத்தில் தொடர் மழை காரணமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதனிடையே நேற்று முன்தினம் அதிகபட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் 24 மிமீ மழை பதிவானது.

சேலம்மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி, வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சேலம் மாநகரப் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. நேற்றும் காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன் பாளையத்தில் அதிகபட்சமாக 24 மிமீ மழை பதிவானது.

மாவட்டத்தில் பிற பகுதியில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: தம்மம்பட்டி 18, ஆத்தூர் 14.2, மேட்டூர் 2.2, கரியகோவில், கொங்கவல்லி, வீரகனூரில் தலா 12, ஓமலூர், காடையாம்பட்டியில் தலா 4, ஏற்காடு 15.6, சங்ககிரி 2.1, சேலம் 6.6, ஆனைமடுவு 10, எடப்பாடி 2.6 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்