விழுப்புரத்தில் வேலை வாய்ப்பு முகாம் - 5,181 பேர் பங்கேற்றதில் 764 பேருக்கு பணியாணை : அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

By செய்திப்பிரிவு

இளைஞர்கள் வேலை வாய்ப் பினை பெற்று தங்கள் வாழ்வாதா ரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நேற்று தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது. ஆட்சியர் மோகன் தலைமையேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மஸ்தான் பங்கேற்று பேசியது:

தமிழக அரசு பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பம் மேற்கொண்டு வேலை வாய்ப்பினை ஏற் படுத்தி தரவேண்டும் என்கிற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக ஆட்சியர் மோகன் பேசியது: கிடைக்கிற பணியை சிறிது என்று கருதாமல் அதை செவ்வனே செய்தால் உயர்ந்த இலக்கினை உங்களால் நிச்சயமாக அடைய முடியும் என்றார்.பின்னர் மாற்றுத்திறனாளியான வெங்கடேசனுக்கு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணையினை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

இம்முகாமில் 117 நிறுவனங்கள் 20, 972 பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய வருகை புரிந்தன. 5,181 பேர் பங்கேற்ற முகாமில் 764 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது. 421 பேர் இரண்டாம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இம்முகாமில் எம்பிக்கள் ரவிக்குமார், விஷ்ணுபிரசாத், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மகளீர் திட்ட அலுவலர் காஞ்சனா, மாவட்ட வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் பாலமுருகன்

இஎஸ் கல்வி குழும தாளாளர் சாமிக்கண்ணு, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்