கடலூரில் பெண்ணையாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

கடலூரில் அனைத்து குடியிருப் போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கெடிலம், பெண்ணையாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புருஷோத்தமன், மனோகரன், கிருஷ்ணமூர்த்தி, தேவநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். நிர்வாகிகள் கண்ணபிரான், கோபால், ரமணி,ராதகிருஷ்ணன், செல்வக்கணபதி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் கெடிலம்,பெண்ணையாறு ஆக்கிரமிப் புகனை அகற்றி இருபுறமும் கரைகளை உயர்த்த வேண்டும். இரண்டு ஆறுகளின் முகத்துவாரங்களையும் கடல் நீர் உட்புகாதவாறு ஆழப்படுத்த வேண்டும். ஆற்றங்கரைகளில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும். கூத்தப்பாக்கத்தில் மாநகராட்சி சார்பில் அமைய உள்ள குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்