மதுரை மாவட்டத்தில் : 502 கண்மாய்கள் நிரம்பின : ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தகவல்

மதுரை மாவட்டத்தில் 502 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை 400 மி.மீ. பெய்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை 350 மி.மீ. மழையே பெய்துள்ளது. மேலூர் உள்ளிட்ட பல இடங்களில் 100 மிமீ மழை வரை ஒரே நாளில் பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 75 சதவீத நீர்நிலைகளில் 90 சதவீதம் தண் ணீர் நிரம்பி உள்ளது. வைகை ஆற்றில் 8 ஆயிரம் க.அடி தண் ணீர் வரத்து உள்ளது. மேலூர் கச்சிராயன்பட்டி, கூடல் நகர் உள் ளிட்ட சில பகுதிகளில் குடியிருப் புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

அங்கு வசித்த 450 பேர் பாதுகாப்பாக அழைத்துச் செல் லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்படுகிறது. அவசரத் தேவைகளை நிறைவேற்ற 33 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. பெரியார் பிரதான கால்வாய் வடிநிலக் கோட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள 1012 கண்மாய்களில் 502 கண்மாய் களில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது. 342-ல் 76 சதவீ தம் முதல் 99 சதவீதமும், 140 கண்மாய்களில் 51 சதவீதம் முதல் 75 சதவீதமும், 28 கண்மாய்களில் 50 சதவீதத்துக்குள்ளும் தண்ணீர் தேங்கி உள்ளது.

பெரியாறு வடி நிலக் கோட்டத் தில் உள்ள கால்வாய்களில் 98 முழுமை யாகவும், 35 கால்வாய்கள் 99 சதவீதம் வரையிலும், 18-ல் 75 சதவீதத்துக்குள்ளும், 21-ல் 50 சதவீதத்துக்குள்ளும், 31-ல் 25 சதவீதத்துக்குள்ளும் தண்ணீர் தேங்கியுள்ளது. 58 கிராமக் கால்வாய் ரூ.60 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE