மேலமடை சிக்னலில் ‘ஃப்ரீ லெப்ட்’வழியை மறிக்கும் வாகனங்கள் : மதுரை போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

மதுரையில் உள்ள போக்கு வரத்து சிக்னல்களில் பெரும்பாலா னவற்றில் “ஃப்ரீ லெப்ட்” வசதி இல்லை, இவ்வசதி இருக்கும் ஓரிரு சிக்னல்களிலும் அவ்வழியை மறித்து வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.

மதுரை நகரில் 12-க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் கள் செயல்படுகின்றன. கோரிப் பாளையம், ஆவின் சந்திப்பு, மேலமடை உள்ளிட்ட ஓரிரு சிக்னல்களில் ‘ஃப்ரீ லெப்ட் ’ வழியின்றி வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன.

இந்நிலையில் மேலமடை சிக்னலில் ஆவின் பகுதியிலிருந்து வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கே.கே.நகர் பகுதிக்கு நிற்காமல் செல்வதற்காக குறிப்பிட்ட தூரம் இரும்பு தடுப்புகள் அமைத்து ‘ஃப்ரீ லெப்ட்’ வசதியை சமீபத்தில் மதிச்சியம் போக்குவரத்து காவல் பிரிவினர் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் மேலமடை, பாண்டி கோயில் நோக்கிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் ‘ப்ரீ லெப்ட்’ வழியை அடைத்து நிறுத்துகின்றனர். மேலும் அவ்விடத்தை பயணிகள் நிறுத்தம் போன்று பயன்படுத்து வதால் கே.கே.நகர், அப்போலோ மருத்துவமனை நோக்கிச் செல்லும் வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் காத்திருக்கின்றன.

அந்த சிக்னலில் பணியில் இருக்கும் போலீஸார் ஒலிப் பெருக்கி மூலம் எச்சரித்தாலும் அவர்கள் கேட்பதில்லை. எனவே ஃப்ரீ லெப்ட் வழியில் வாகனங்களை நிறுத்துவோர் மீது போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷிடம் கேட்டபோது, ‘‘மேலமடை சிக் னலில் ஆவின் பகுதியில் இருந்து வரும் பகுதியில் ஓரளவுக்கு இடவசதி இருந்ததால் ‘ஃப்ரீ லெப்ட்’ ஏற்படுத்தினோம். ஆனால் வாகனங்களில் செல்வோர் முறை யாக பயன்படுத்துவதில்லை.

போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறையாக இருப்பதால் நாங்கள் என்ன செய்ய முடியும். இருப்பினும் மைக் மூலம் எச்சரிப்பதோடு, விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE