புதிதாக அமைப்பதில் மட்டும் ஆர்வம் - மதுரை மாநகராட்சியில் பராமரிப்பில்லாத பூங்காக்கள் : சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதுரையில் செயல்படாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பூங்காக்கள் இருக்கும்நிலையில் அவற்றை பராமரிக்கவும், செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்காமல் புதிய பூங்காக்களை அமைத்து அரசு நிதியை விரயமாக்குவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 165 பூங்காக்கள் உள்ளன. இதில் ராஜாஜி பூங்கா, ஈக்கோ பார்க் போன்ற குறிப்பிடத்தக்க 65 பூங்காக்களை தவிர மற்ற பூங்காக்கள் செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளன. ராஜாஜி பூங்காவிலும் பழுடைந்த பழமையான விளை யாட்டு உபகரணங்களே உள்ளன. காலத்துக்கு தகுந்தாற்போல் குழந்தைகளை ஈர்க்கும் புதிய விளையாட்டு உபகரணங்கள் இல்லை. எனவே மாநகராட்சியில் செயல்படாமல் இருக்கும் 100 பூங்காக்களை பராமரித்து செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஏராளமான பூங்காக்கள் செயல்படாமல் புதர் மண்டிக் கிடக்கின்றன. அவற்றை சீரமைத்து பராமரிக்க சிறப்புத் திட்டங்களை கொண்டு வந்து அந்தந்த பகுதி குழந்தைகள், அந்த பூங்காக்களில் விளையாடுவதற்கும், பொது மக்கள் நடைபயிற்சி செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ஈக்கோ’ பார்க்கில் நடந்த ‘லேசர் ஷோ’ தற்போது முடங்கியுள்ளது.

ஆனால், தற்போது வைகை ஆற்றங்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 2 பூங்காக்கள் அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.

இருக்கின்ற பூங்காக்களை பராமரிக்காமல் புதிய பூங்காக்களை அமைக்க கோடிக்கணக்கான ரூபாயை விரயமாக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. முதலில் செயல்ப டாமல் முடங்கிக் கிடக்கும் பூங் காக்களை செயல்படுத்திவிட்டு அதன்பிறகு புதிய பூங்காக்களை அமைக்கலாம். புதிய பூங்காக் களை அமைப்பதும், அதன்பிறகு அவற்றை பராமரிக்காமல் கைவிடு வதும் மாநகராட்சிக்கு வாடிக்கை யாகி வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘செயல்படாத பூங்காக்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE