பணகுடி அருகிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அனுமன் நதி மற்றும் குத்தரபாஞ்சன் அருவியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ராதாபுரம் தாலுகாவில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராதாபுரம் தாலுகாவில் உள்ள அனைத்து குளங்களும் நீண்ட காலத்துக்கு பிறகு நிரம்பியுள்ளன.
நீராட தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால் பணகுடி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனுமன் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பணகுடிக்கு மேற்கேயுள்ள குத்தரபாஞ்சான் அருவியில் தண்ணீர் கொட்டுவதால், அங்கு நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பணகுடி அருகேயுள்ள கொமந்தான்குளம் ஊருக்குள் செல்லும் தரைப்பாலம் மற்றும் சைதம்மாள்புரம் வடக்கு தரைப்பாலம் என இரு பாலங்களையும் மூழ்கடித்து வெள்ளம் பாய்வதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு ஊர்களுக்குள் செல்லும் பாதை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரெகுநாதபுரத்தில் உள்ள லெட்சு மணன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு பார்வை யிட்டார். கொமந்தான் குளத்தி லுள்ள 60 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களையும், ரெகுநாதபுரத்தில் வீடு இழந்த லெட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு மாதத்துக்கான அரிசி, மளிகை பொருட்களையும் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago