நீர்நிலைகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண் டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்துள்ளது. இதையொட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. வட கிழக்கு பருவமழை தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04175 – 232377 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தி.மலை வட்டத்தை தவிர, பிற வட்டங்களில் வசிப்பவர்கள் 04175-1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள், பலவீன மடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களை தங்க வைக்க, தற்காலிக நிவாரண மையங் கள் தயார் நிலையில் உள்ளன. கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவாரண மையத்தில் தங்குவது குறித்து மக்கள் தெரிவிக்கும்போது, அவர்களை அழைத்து வந்து நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அடிப்படை வசதி கள் செய்து தரப்படும். மழை காலத்தில் சுவர் இடிந்து விழுந்து ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.
கன மழையால் பெரும் பாலான நீர்நிலைகள் முழு வதும் நிரம்பி உள்ளன. நீர்நிலைகளுக்கு சென்று பாதுகாப்பற்ற முறையில் புகைப் படம் எடுப்பது, குளிப்பது, சிறுவர்கள் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு நீரில் மூழ்கி உயிரி ழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, நீர்நிலைகளுக்கு செல்வதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக துணை ஆட்சியர் நிலையில் 18 ஒன்றியங்களில் தலா ஒரு நியமன அலுவலர் மற்றும் 4 நகராட்சிகளுக்கு நகராட்சி ஆணையர்களும் மற்றும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, வெளியேற்றக் குழு மற்றும் நிவாரண மையம், தங்குமிடம் மேலாண்மை குழு என 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago