தி.மலையில் வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆண்களுக்கான நவீன வாசக்கடமியின் 2 வாரத்துக்கான, தங்க தந்தை திட்டத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்து, பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், அவர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இதில், மாவட்ட குடும்ப நல செயலகத்தின் இயக்குநர் அன்பரசி, மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலர் அமரேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்