விரிஞ்சிபுரம், உள்ளி ஆகிய பகுதியில் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட பரிந்துரை செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் பாலாற் றில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சேதமடைந்த விரிஞ்சிபுரம் தரைப் பாலம் பகுதியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஆற்றின் கரையோரம் பகுதியில் மண் அரிப்பால் ஆபத்தான நிலையில் இருந்த இரண்டு கட்டி டங்களை இடித்து அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து, தரைப்பாலம் சேத மடைந்த பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘விரிஞ்சிபுரம் தரைப் பாலம் சேதமடைந்ததால் போக்கு வரத்துக்கு பள்ளிகொண்டா அல்லது காட்பாடி வழியாக பொதுமக்கள் சுற்றிவர வேண்டும். பாலாற்று வெள்ளத்தால் சேத மடைந்த விரிஞ்சிபுரம் மற்றும் உள்ளி தரைப்பாலத்துக்கு பதிலாக இரண்டு உயர்மட்ட மேம் பாலங்கள் கட்ட அரசுக்கு பரிந் துரை செய்யப்பட உள்ளது.
பொன்னை ஆற்றின் குறுக்கே குகையநல்லூரில் தடுப்பணை கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் பணிகள் தொடங்கும். அதேபோல், பாலாற்றின் குறுக்கே இறைவங்காடு மற்றும் சேண் பாக்கம் பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.12.90 கோடி மதிப்புள்ள தடுப்பணை கட்டப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘பொதுமக்களின் பாதுகாப்பு கருதியே ஏரியில் இருந்து தண்ணீர் திறக் கப்பட்டுள்ளது.
பொறியாளர்கள் குழுவின் ஆய்வறிக்கை கிடைத்ததும் மீண்டும் தண்ணீரை சேமிப்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஒலகாசி கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக அமைக் கப்பட்ட தற்காலிக இரும்பு பாலத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago