‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்’ திட்டம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பாலியல் ரீதியான வன்முறைகள் நிகழாமல் தடுக்கவும் ‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்' என்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட தொடக்க விழா ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று நடைபெற்றது.

மாநில மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி திட்டத்தை தொடங்கிவைத்து பேசியது:

இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளிடம் பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்முறைகள் நிகழ்ந்துள்ளனவா என்பதை மதிப்பீடு செய்ய 201 பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 26,085 மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. இதற்காக ஆட்சியர் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாலியல் வன்முறைகள் கண்டறியப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்