வேலூர் மாவட்டத்தில் மழை தொடர்வதால் - பயிர்சேத கணக்கெடுப்பை நீட்டிக்க வேண்டும் : குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பயிர்சேத பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பை 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலை மையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, இணை இயக்குநர் (வேளாண்) மகேந்திர பிரதாப் தீக் ஷித், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:

விவசாயி: 78 மீட்டர் அகலம் கொண்ட உத்திரகாவேரி ஆறு ஆக்கிரமிப்பால் 10 மீட்டராக சுருங்கி விட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு மழை தொடர்ந்து இருக்கும் என்பதால் பயிர்சேத பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பை 10 நாட் களுக்கு நீட்டிக்க வேண்டும்.

விவசாயி: அப்புக்கல் கிராமத் தில் பொதுவழி பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

ஆட்சியர்: நாங்கள் கொடுக்கும் பொதுவழியை நீங்கள் பயன் படுத்துவதாக இருந்தால் நிலத்தை கையகப்படுத்தி அரசாணை வெளியிடுகிறேன்.

விவசாயி: கிணறுகள் நிரம்பிய தால் மண் சரிவு ஏற்படுகிறது. இதற்காக கிணறுகளை மூடவும் அதற்கு தேவையான மண் எடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.

ஆட்சியர்: வட்டாட்சியர் அலு வலகங்களில் மனு கொடுத்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

விவசாயி: லத்தேரி ஏரி நிரம்பிய நிலையில் கரை பலவீனமடைந்துள்ளது. மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாத்து வரு கிறோம்.

ஆட்சியர்: பல இடங்களில் மக்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். வேலூரில் சில ஏரிகளின் பாதுகாப்புக்காக அடுக்கி வைத்த மணல் மூட்டைகளை பொதுமக்கள் சிலர் எடுத்துவிட்டு தண்ணீரை வெளி யேற்றுகின்றனர். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.

விவசாயி: சேத்துவண்டை விஏஓ அலுவலகத்தில் பயிர் கடனுக்காக அடங்கல் வழங்க ரூ.300, ஓர் ஏக்கர் நிலத்தை அளக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட் கின்றனர். வேளாண் அதிகாரிகள் யாரும் அரசின் திட்டங்களை எங்கள் கிராமங்களில் சொல்வதே இல்லை.

ஆட்சியர்: வேளாண் அதிகாரிகள் அரசின் திட்டங் களை கிராமங்கள் தோறும் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

விவசாயி: அரசுப் பேருந்து களில் உழவர் அடையாள அட்டை இருந்தால் டிக்கெட் வசூலிப்பதில்லை. அட்டை இல்லாத விவசாயிகளிடம் இரண்டு மடங்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கின்றனர். எங்களால் அடையாள அட்டையும் பெற முடியவில்லை.

ஆட்சியர்: மனுவாக எழுதி கொடுங்கள் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்