திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முல்லை தலைமை வகித்தார். மார்க்கிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் காசி முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஞானசேகரன் வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அத்தியா வசியப் பொருட்கள் சட்ட திருத்த மசோதா, குறைந்த பட்ச ஆதார விலை உத்தரவாத சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மின்சார திருத்த சட்டம் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்காக உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

புதுடெல்லியில் நடந்த விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதற்கான அரசாணை உடனடியாக தயார் செய்து குடியரசுத் தலைவரிடம் கையொப்பம் பெற்று ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை முன்வைத்து முழுக்கமிட்டனர்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சுந்தரேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், கேசவன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், திருப்பத்தூர் நகர துணை செயலாளர் முருகன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்