விழுப்புரம் ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல், மனநலம் மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 156, சாரதாம்பாள் வீதி,நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் - 605 401.தொலைபேசி எண்: 04146 – 290659 அல்லது (dcpuvpm1@gmail.com ) என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago