தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து பாரதிய ஜனதாவுக்குத் தாவும் நிலையில் அவர்களைத் தக்கவைக்க முடியாமல் அக்கட்சித் தலைமை திணறுகிறது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் உட்பட சில மாவட்டங்களில் மட்டுமே பாஜ ஓரளவு செல்வாக்குடன் இருக் கிறது. மற்ற மாவட்டங்களில் அக் கட்சிக்குச் செல்வாக்கில்லை.
ஆனால், மத்தியில் பாஜக 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு தமிழகத்தில் அக்கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு ஒதுக்கிய 20-ல் திரு நெல்வேலி, கோவை தெற்கு, நாகர்கோவில், மொடக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சில தொகுதிகளில் நெருங்கி வந்தபோதும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
திமுக, அதிமுக-வில் செல் வாக்கு இழந்த, உட்கட்சிப் பூசலில் அதிருப்தியடைந்த நிர் வாகிகள் பெரும்பாலும் இந்த இரு கட்சிகளுக்கே மாறி மாறித் தாவி வந்தனர். எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா மறைந்த சில மாதங்கள் வரை அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற பலரும் தற்போது செல்வாக்குடன் முக்கிய அதிகார மையமாகத் திகழ் கின்றனர். அதற்கு உதாரணம் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தங்க.தமிழ்ச்செல்வன்.
ஆனால், தற்போதைய அதிமுக இரட்டைத் தலைமை மீதான அதிருப்தியால் விலகும் பெரும்பாலானோர் திமுகவுக்குச் செல்வதைவிட பாஜவுக்கு செல் வதையே விரும்புகின்றனர். திமு கவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம், முன்னாள் துணை சபாநாயகர் விபி.துரைசாமி, திருப் பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் பாஜவுக்கு சென்றனர்.
சில தினங்களுக்கு முன் அதி முக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மாணிக்கம், சோழன் சி.த.பழனிசாமி பாஜவில் இணைந்தனர். முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜவுக்குச் செல்வது வெளிப்படையாகத் தெரியும் நிலையில், தொண்டர்கள், சிறிய பொறுப்புகளில் உள்ள அதி முகவினர் பாஜவுக்கு அதிகம் செல்வது வெளியே தெரியாமல் உள்ளது.
ஜெயலலிதா இருந்தபோது மாவட்ட, ஒன்றிய, நகர செயலர்கள் அடிக்கடி மாற்றப்படுவார்கள். யார் வேண்டுமென்றாலும் எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், மேயர் மற் றும் கட்சிப் பதவிகளுக்கு வர லாம் என்ற நிலை இருந்தது. அதனாலே, இளைஞர்களும், மாற்றுக் கட்சியி னரும் அதிமுகவில் அதிகம் இணைந்தனர்.
ஆனால், திமுகவைப்போல் அதி முகவிலும் மாவட்டச் செயலர்கள் நிரந்தரமாக அந்தப் பதவிகளில் தற் போது ஒட்டிக்கொண்டுள்ளனர். குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை நீக்க கட்சித் தலைமை தயங்குகிறது.
ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைமை இல்லாததால் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாததது கண்கூடாகத் தெரிகிறது. இதனால், மற்ற கட்சிக்குச் செல்லும் அதிமு கவினரை தக்க வைக்க முடியாமல் தலைமை திணறுகிறது.
வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியில் இன்னும் பல அதிமுக நிர்வாகிகள் பாஜ, திமுக பக்கம் செல்லலாம் என்பதால் மாவட்டச் செயலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago