கப்பலூர் சுங்கச்சாவடி 2 மணி நேர முற்றுகைக்கு பின் - திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு கட்டண விலக்கு : போராட்டக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு

By செய்திப்பிரிவு

கப்பலூர் சுங்கச்சாவடியை வாகன உரிமையாளர்கள் 2 மணி நேரம் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தியதால் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு மட்டும் கட்டண விலக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கப்பலூரில் உள்ள 4 வழிச்சாலையில் சுங்கச் சாவடி நகரிலிருந்து 3 கிமீ தொலைவில் விதியை மீறி அமைக்கப்பட்டது.

இதனால் பல்வேறு போராட்டங் களுக்குப் பின் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தோருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் தவறான தக வலை அளித்து அனுமதி பெற்றுள்ள சுங்கச்சாவடியை அகற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் அறிவித்தார். இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முதல்வரிடம் அமைச்சர் பி.மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக வாகன உரிமையாளர்களுக்கு சுங்கச்சாவடி நிர்வாகம் நோட் டீஸ் அளித்தது. இதனால் அதிரு ப்தி அடைந்த திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி வாகன உரிமையாளர்கள் நேற்று சுங்கச்சாவடியை முற்றுகையிட் டனர்.

அவசர வழியைத் தவிர அனை த்து வழிகளையும் அடைத்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் ஓ.ஆலங்குளம், விடத்தகுளம் சாலை வழியாக வாகனங்களை போலீஸார் திருப்பி விட்டனர். போராட்டக் குழுவி னருடன் போலீஸார், சுங்கச்சாவடி மேலாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இறுதியில் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிப்பதாக சுங்கச்சாவடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட் டோர் கலைந்து சென்றனர்.

இது குறித்து திருமங்கலம் நகர் திமுக முன்னாள் செயலர் தர் கூறுகையில், முக்கிய அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வர வில்லை.

விதிப்படி சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன்தான் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

நிரந்தரத் தீர்வு காணும் வரை எந்தச் சூழ்நிலையிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது. நெடுஞ்சாலை ஆணையம் தன்னிச்சையாகச் செயல்படுவதை ஏற்க முடியாது. இதை நடைமுறைப்படுத்த முயன் றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தோம், என்றார்.

ஆண்டிச்சாமி(டி.கல்லுப்பட்டி வேன் உரிமையாளர்):

பல நூறு வாகனங்களுடன் முற்றுகையிட புறப்பட்டோம். போலீஸார் ஆங் காங்கே வாகனங்களை தடுத்து விட்டனர். இதனால் பேருந்து, இரு சக்கர வாகனங்களில் சென்று முற் றுகையிட்டோம்.

தற்போதைக்கு கட்டண வசூல் இருக்காது என தெரிவித்துள்ளனர். 2 மார்க்கங்களிலும் போலீஸார் நிறுத்தப்பட வேண்டும். கட்டண விலக்கு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்க வலியுறுத்தி உள்ளோம் என்றார்.

மணிவண்ணன் (டி.கல்லுப்பட்டி சரக்கு வாகன உரி மையாளர்):

சுங்கச் சாவடி நிர் வாகம் இதுவரை சொன்ன எதையும் கடைப்பிடித்தது இல்லை. இப்பிரச்சினையை நாங் கள் விடுவதாக இல்லை. மீண்டும் சுங்கக் கட்டணம் வசூலித்தால் 2 ஆயிரம் வாகனங்களுடன் பெரிய அளவில் போராட்டம் நடத்து வோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்