அனுமதியின்றி மாடுகள் வளர்க்க தடை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் அனுமதியின்றி மாடுகள் வளர்க்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் பா. விஷ்ணுசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் பலர் அவற்றை முறையாக வீடுகளில் கட்டி வைத்து வளர்ப்பதில்லை. காலை வேளைகளில் பால் கரந்த பிறகு அவற்றை வெளியில் மேய்ச்சலுக்கு விடும் உரிமையாளர்கள், பின்னர் அதைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. போக்குவரத்துக்கு இடை யூறாக சாலைகள், தெருக்கள், பொது இடங்களிலும் அவற்றை சுற்றித்திரிய விடுகிறார்கள். இதனால், விபத்துகள் ஏற்படு கின்றன.

நேற்று மட்டும் 152 கால்நடைகள் பிடிக்கப்பட்டு கோசாலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இனி ரூ.10,000 வரை அபராதத் தொகையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றின் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி சட்டம்-1994 மற்றும் பொதுசுகாதார சட்டம் -1939 மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநகராட்சி அனுமதியின்றி மாநகர எல்கைக்குள் மாடு வளர்க்க கூடாது என்று எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்