பிளாஸ்டிக் உற்பத்தி குறித்து தகவல் அளித்தால் வெகுமதி :

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரொமால்ட் டெரிக் பின்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை அரசு வெளியிட்டு ள்ளது. குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி யாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இத்தகைய ஆலைகள் குறித்து பொதுமக்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். செல்பேசி எண்- 80560 42265, மின்னஞ்சல் முகவரி- deetnv@tnpcb.gov.in. இத்தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர் களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இத்தகைய ஆலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்