கால்நடைகளை நோய்கள் தாக்கும் நிலையில் - 56 மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை : தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் கவலை

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்த படியாக பிரதான தொழிலாக ஆடு வளர்ப்பு தொழில் உள்ளது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் போன்ற பகுதிகளில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தற்போது பருவமழைக் காலம் என்பதால் கால்நடைகளை நோய்கள் தாக்கி வருகின்றன. நோய் பாதித்த கால்நடைகளை அருகே உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு கொண்டு சென்றால், அங்கு 3 மாத காலமாக மருத்துவர்கள் இல்லை. உரிய மருந்துகளும் இல்லை என தெரிவிப்பதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, இந்தாண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆடுகள் மேய்ச்சலுக்கு போக முடியாமல் தொழுவத்தில் முடங்கி கிடக்கின்றன. கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடுகளுக்கு காய்ச்சல், மூக்குச் சளி, வாய்க்கானம் போன்ற நோய்கள் ஏற்பட்டு அதிகம் பாதிக்கப்படுகின்றன. ஆடுகள் உயிரிழப்பை தடுக்க கிராமங்கள் தோறும் நடமாடும் மருத்துவக் கூடம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 56 கால்நடை மருத்துவமனை களில் மருத்துவர்கள் இல்லா ததால் கால்நடைகள் மற்றும் ஆடுகளுக்கு சிகிச்சை பெற முடியவில்லை. அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE