ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் பல்வேறு கட்களில் இருந்து விலகிய 300 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அப்போது, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார், ராணிப்பேட்டை மாவட்ட அவைத்தலைவர் அசோகன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago