சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக புதிய துணைவேந்தர் நேற்று பதவியேற்றார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக புதிய துணை வேந்தராக டாக்டர் ராம கதிரேசன் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை துறையில் துறைத் தலைவராகவும் மற்றும் பேராசிரியராகவும் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர் ஆவார்.இவர் தற்போது கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் சிண்டிகேட்டி உறுப்பினராக உள்ளார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு நியமிக்கப்படும் 3- வது துணை வேந்தராவர்.முன்னதாக துணைவேந்தர் கதிரேசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல்கலைக் கழக நிறுவனர் அண்ணாமலை செட்டியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதிய துணைவேந்தராக பதவியேற்றுள்ள கதிரேசனுக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வநாராயணன், தொலைதூர கல்வி இயக்கக இயக்குநர் சிங்கார வேல்,பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி சம்பத் மற்றும் அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago