விழுப்புரம் அருகே லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முத்துகிருஷ்ணன்(78) என்பவர் 1986 -1991 காலகட்டத்தில் கெங்கராம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவராக பதவி வகித்தார். இவர் நேற்று விழுப்புரம் ஆட்சியர் மோகனைச் சந்தித்து, மிகப் பழைய நீர் வழி வரைபடம் ஒன்றை அளித்தார். “தென்பெண்ணையாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைந்து, கடலூர் மாவட்டத்திற்குள் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீர் வழித்தடத்தின் பழைய வரைபடம் இது. தற்போதைய நிலையில் இது மாவட்ட நிர்வாகத்திற்கு பயனளிக்கும்” என்று முத்துக்கிருஷ்ணன் அப்போது தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago