கடலூர் அருகே ராமாபுரம் ஊராட்சியில் 13 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது.
கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமாபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டுவதற்கான பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று வழங்கினார். தொடர்ந்து அதே ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக பூமி பூஜை நடைபெற்றது.
மேலும் அப்பகுதியில் இத்திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளான கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்," பொதுமக்களுக்கு நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தும் அத்தியாவசிய திட்டம் என்பதால் அலுவலர்கள் இதற்கு தனிக்கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்" என்றார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், உதவிசெயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) முகமதுயாசின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோக்பாபு,சக்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago