மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் மோசமான சாலைகளை செப்பனிட ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகரில் பல கண்மாய்களின் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் 40 ஆண்டுகளுக்குப் பின் நீரை நிரப்பி உள்ளோம். வணிகவரி அலுவலர்கள் இடமாற்றம் விதிகளுக்கு உட்பட்டுத்தான் மேற்கொள்ளப்பட்டது. ஒரே இடத்தில் 10 ஆண்டுகள் வரை பணியில் இருந்தவர் களே மாற்றப்பட்டனர். கப்பலூர் சுங்கச் சாவடி கட்டண வசூல் பிரச்சினை குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பேச்சு நடத்தப்படவுள்ளது.
ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநி யோகித்ததாக முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்தகைய அரிசி கடந்த அதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்த தரமற்ற நெல் மூலம் கிடைத்தது. தரமற்ற அரிசி விநியோகித்திருந்தால் மாற்றி வழங்கப்படும். தற்போது தரமான நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது, என்றார்.
முன்னதாக கிழக்குத் தொகுதியில் 99 பேருக்கு பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உத்தரவுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். ஆட் சியர் எஸ்.அனீஷ்சேகர் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago