மதுரையைச் சேர்ந்த இருளாண்டி, உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு: மதுரை- குமுளி - கொச்சி நெடுஞ்சாலையில் தேனி மருத்துவக் கல்லூரி அருகே அரப்பிடிதேவன்பட்டியில் டோல்கேட் உள்ளது. தற்போது திண்டுக்கல்-தேனி-குமுளி தடத்தில் தேனி உப்பார்பட்டியில் டோல்கேட் அமைக்கும் பணி நடக்கிறது. குறிப்பிட்ட தொலைவுக்குள் 2 டோல்கேட்டுகள் அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து குமுளி செல்வோர் உப்பார்பட்டியில் மட்டும் கட்டணம் செலுத் தினால்போதும். ஆனால், மதுரையில் இருந்து குமுளி செல்வோர் குறைந்த தொலைவுக்குள் 2 டோல்கேட்டுகளிலும் கட்டணம் செலுத்த வேண்டும். உப்பார்பட்டியில் டோல்கேட் அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன் னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் டோல்கேட் மட்டும்தான் அமைக்கப்பட்டது. கடந்த 2016 முதல் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago