மாணவர் இருப்பது தெரியாமல் வகுப்பறையை பூட்டிய விவகாரம் - அரசுப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை :

By செய்திப்பிரிவு

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வகுப்பறைகள் மற்றும் முன்புற மெயின் கேட்டை மூடிவிட்டு ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்றனர். இந்நிலையில், இரவு 9.20 மணியளவில் பள்ளியின் உள்ளே இருந்து மாணவர் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த ஆசிரியர்கள் வகுப்பறையை திறந்து பார்த்தபோது வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவர் சந்துரு (16) இருந்தது தெரிந்தது.

உடல் நலம் சரியில்லாததால் தனி அறையில் உறங்கியதாகவும், இதை அறியாமல் வகுப்பறையை மூடிவிட்டு சென்றதாகவும் சந்துரு தெரிவித்தார். இதையடுத்து, சந்துரு பாதுகாப்பாக அவரது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே வகுப்பறையை பூட்டியது தொடர்பாக திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலர் விஜயா தலைமையிலான அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியை பொன்னி உள்ளிட்ட ஆசிரியர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர். வரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் இருக்க அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்