வாகன நெரிசலைக் குறைத்து, எளிதில் வந்து செல்வதற்காக - மண்ணச்சநல்லூருக்கு மேலும் ஒரு புறவழிச்சாலை : ரூ.35 கோடி செலவில் அமைக்கத் திட்டம்

By செய்திப்பிரிவு

மண்ணச்சநல்லூரில் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற் காகவும், சென்னை வழித்தடத்தில் வருவோர் நாமக்கல், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்லக்கூடிய வகையிலும் மண்ணச்சநல்லூரில் மேலும் ஒரு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் பகுதியில் ஏராளமான அரிசி ஆலைகள், இரும்பு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், திருச்சி - துறையூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் மண்ணச்சநல் லூர் வழியாக செல்லக்கூடிய வெளியூர் பேருந்துகள், கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகி றது. இவற்றால் மண்ணச்சநல்லூர் ஊருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், திருச்சி - துறையூர் சாலையில் அத்தாணியை அடுத்த பங்குனி ஆற்றுப்பாலத்திலிருந்து, துறையூர் சாலையிலுள்ள மண் ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவ லகம் வரை 2.64 கி.மீ தொலை வுக்கு ரூ.25.15 கோடி மதிப்பீட் டில் அரைவட்ட வடிவில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் மண்ணச்சநல்லூ ருக்குள் வாகன நெரிசலை முற்றிலுமாகக் குறைக்கும் வகை யில், மேலும் ஒரு புறவழிச் சாலையை உருவாக்குமாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத் தினார். அதன்பேரில் மாநில நெடுஞ்சாலைத்துறை திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறி யாளர் கேசவன் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதனடிப்படையில் தற்போது திருச்சி - துறையூர் சாலையில் பங்குனி ஆற்றுப் பாலம் அருகே தற்போதுள்ள புறவழிச்சாலைக்கு, எதிர்திசையில் (வலது புறத்தில்) தொடங்கி சமயபுரம் - மண்ணச்சநல்லூர் சாலையில் வெங்கங்குடி பகுதி வரை மேலும் ஒரு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘மண்ணச்சநல்லூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள புறவழிச்சாலை சுமார் 2.8 கி.மீ தொலைவும், 10 மீ அகலமும் கொண்டதாக இருக்கும். இப்பணி களுக்கு சுமார் ரூ.35 கோடி செலவு ஆகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கும் பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி, ஓரிரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால், சென்னையிலிருந்து துறையூர், நாமக்கல் செல்லக் கூடியவர்கள் தேசிய நெடுஞ் சாலையில் பிரிந்து வெங்கங்குடி வழியாக இந்த புறவழிச் சாலையை அடைந்து நொச்சியம் வழித்தடத்தில் நாமக்கல் சென்று விடலாம். அதேபோல சமயபுரம் கோயிலுக்கு வரக்கூடியவர்கள் மண்ணச்சநல்லூருக்குள் செல்லாமலேயே திருப்பைஞ்ஞீலி, ஓமாந்தூர், திருவெள்ளறை உள்ளிட்ட ஆன்மிகத் தலங்க ளுக்கும், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எளிதில் சென்று விடலாம் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்