சங்கரன்கோவிலில் 57 மி.மீ. மழை : பாபநாசம் அணை நீர்மட்டம் 138.40 அடியாக இருந்தது

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 57 மி.மீ. மழை பதிவானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு நாட்களாக விட்டுவிட்டு சாரல் மழை பரவலாக பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரில் நேற்று பகலில் விடாமல் பெய்த சாரல் மழையால் நகரில் பல்வேறு சாலைகளும், தெருக்களும் சகதிக்காடாக மாறின. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். திருநெல்வேலி டவுன், பேட்டை, நெல்லையப்பர் நெடுஞ்சாலை, பாளையங் கோட்டை திருச்செந்தூர் சாலை, சாந்திநகர் சாலை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் மாறியுள்ளன.

மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 12, பாபநாசம், நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் கொடுமுடியாறில் தலா 10, மணிமுத்தாறு- 7.2, அம்பாசமுத்திரம் மற்றும் பாளையங்கோட்டையில் தலா 6, சேரன்மகாதேவி மற்றும் களக்காட்டில் தலா 5.4, திருநெல்வேலி- 4.6, ராதாபுரம்- 2.

பாபநாசம் அணை நீர்மட்டம் 138.40 அடியாக இருந்தது. அணைக்கு 1,158 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கனஅடி திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 93.15 அடியாக இருந்தது. அணைக்கு 212 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சங்கரன்கோவிலில் 57 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 46, அடவிநயினார் அணையில் 31, தென்காசியில் 14.40, கருப்பாநதி அணையில் 13, சிவகிரியில் 12, செங்கோட்டையில் 11, ராமநதி அணையில் 10, குண்டாறு அணையில் 8, கடனாநதி அணையில் 6 மி.மீ. மழை பதிவானது.

குண்டாறு அணை, கருப்பாநதி அணை ஆகியவை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளன. கடனாநதி அணை நீர்மட்டம் 82.60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 81 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 131.75 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்